Microsoft Excel இல் Formula என்பது user இன் தேவைக்கு ஏற்றாப்போல் உருவாக்கப்படுவதாகும். உதாரணம் =10+5, =A1+A2, =C2/C3 ஆனால் Function எனப்படுவது ஏற்கனவே தேவைக்கு ஏற்றாப்போல் வடிவமைக்கப்பட்டு அதற்கென்று ஒரு பெயரில் Excel இல் காணப்படுவதாகும்.அது சம்பந்தமான தகவலை இன்று பார்போம்.
SUM Function
Microsoft Excel இல் பிரபல்யமான ஒரு Function தான் இது. Arithmetic வேலைகளை மிக இலகுவான முறையில் செய்து கொள்ள முடியும்.ஒரு function இற்குல் நாம் வழங்கும தரவை Value அல்லது Argument அல்லது parameter என்று கூறலாம்.
இந்த function இன் Syntax இனை இரண்டு முறையில் எழுதலாம்.
- =SUM(number1,Number2,number3...)=இனை தொடர்ந்து Function Name டைப் செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து கட்டாயம் ( போடவேண்டும் மற்றும் ஒவ்வொரு Argument இற்கும் இடையில் கட்டாயம் , போடவும் வேண்டும்.=SUM(10,20)அல்லது
=SUM(A1,A2,A3,A4,A5) - =SUM(Cell Range1, Cell Range2 , Cell Range3)
Cell Range எனப்படுவது ஒன்றுக்கு மேற்பட்ட cell களின் தொகுதியாகும். முதலாவது ஆரம்ப Cell Address ஐயும் அதன் பின் : அதனை தொடரந்து வருவது இறுதி Cell Address ஆகும்.
Example (A1:A10) or (A1:C5)
A5 இல் மேல் உள்ள இலக்கங்களின் கூட்டுத்தொகையை கான வேண்டுமானால் Formula மூலம் =A1+A2+A3+A4 என டைப் செய்ய வேண்டும்.
- =SUM(A1,A2,A3,A4)
- =SUM(A1:A4)
ஒன்றுக்கு றே்பட்ட Cell Range இனையும் வழங்க முடியும். - =SUM(TOTAL)
இங்கு 3 வதாக வழங்கப்பட்டிருப்பதும் Cell Range தான்.அதாவது Cell Range இனை Select செய்த பின் Name box இற்கு சென்று அதனுடைய பெயரினை மாற்றியுள்ளேன்.
Note:
- SUM Function இற்குல் இலக்கத்தை தவிர வேறு ஏதாவது எழுத்துக்கள் இருந்தால் #NAME? என்ற Error செய்தி தோன்றுவதை அவதானிக்கலாம்.=SUM(27,NIMZATH)ஆனால் nimzath என்பது ஒரு Cell Range இன் பெயரானால் அந்த Error செய்தி வராது.
- இதை கூட்டுவதற்கு மட்டுமல்ல வேற செய்முறைக்கும் பயன்படுத்தலாம். உதாரணம் , இற்கு பதிலா Arithmetic Operator பயன்படுத்த முடியும்.=SUM(10-5)=SUM(10*5)=SUM(10/5)=SUM(10^5)=SUM(10+5)
- இதில் ஆகக்கூடுதலாக 255 Arguments இனை மட்டுமே வழங்க முடியும்.ஆனால் Cell Range இனை =SUM(A1:A4000) ஒரு Argument ஆகவே கருதும்.
- MS Excel இல் எந்தவொரு இலக்கத்தையும் 0 இனால் பிரிக்க முடியாது அப்படி செய்தால் #DIV/0! என்ன Error செய்தி தோன்றும்.
=SUM(10/0) - Worksheet இல் ஏதேனும் ஒரு இடத்தில் உங்களுக்கு கூட்டுத்தொகையை கானவேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் Total தோன்ற நினைக்கும் இடத்தல் Cell இனை Select செய்தபின் Keyboard இல் Alt + = இனை press செய்யவும்.
பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment