இன்று நாம் VBஇல் பார்க்க இருப்பது எப்படி ஒரு Function ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்.சரி VBஇல் மொத்தமாக எத்தனைFunction உள்ளது ? என முதலில் தெரிந்து கொள்வோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Code எழுதும் பகுதியில் வைத்து, windows + space களை ஒரே நேரத்தில் press பனன்னவும்.இப்போது VBஇல் உள்ள அனைத்து Function களும் தோன்றும்.அதில் நாமும் ஒரு Function ஐ எப்படி இணைப்பது என்று இப்போது பார்ப்போம்.
இரண்டு விதமாக ஒரு Function ஐ உருவாக்க முடியும்.முதலாவது General பகுதியில்
Function Nimzath என்று எழுதிய பின்னர் (Nimzath என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் பெயரை மாற்றிக்கொள்ளவும்) Enter Key ஐ அழுத்தவும்,பின்வருமாறு காட்சியளிக்கும்.
Function Nimzath()
End Function
இந்த Function இல் தேவையானதை எழுதிக்கொள்ளுங்கள்.உதாரணமாக
Function Nimzath()
MsgBox "Welcome to nimzath.blogspot.com", vbInformation, "Nimzath"
End Function
இதில் நீங்கள் கவணிக்க வேண்டியது என்னவென்றால் Form1 , General பகுதியில் Function Nimzath என்று உருவாக்கினால் அந்த Function ஐ Form1 இல் தான் பயன்படுத்தி கொள்ள முடியும். அந்த Function ஐ Form2 இல் பயன்படுத்த முடியாது.
.இரண்டாவது முறை Module
இதற்கு நீங்கள் ஒரு Module உருவாக்க வேண்டும்.
இதில் நீங்கள் விரும்பும் பெயரில் ஒரு Function ஐ உருவாக்கவும்
Function Nimzath()
End Function
இதில் தேவையானதை எழுதி கொள்ளுங்கள்.இரண்டாவது முறையில் என்ன நண்மை என்றால் ஒரே Code ஐ ஒரே Project இல் திரும்ப திரும்ப எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை அந்த Code ஐ இப்படி ஒரு Function இல் உருவாக்கி வைத்துக்கொண்டால் போதும்.உதாரணமாக,
Programe ஐ நிறுத்துவதற்கு End அல்லது Unload me ஐ பயன்படுத்துவோம்.இதை கொஞ்சம் மெருகூட்டி அதாவது வெளியேறவா? என்ற ஒரு செய்தியை பயன்படுத்துவோருக்கு தெரிவித்து அவர் ஆம் என்றால் எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.
( Module1 )
Function Nimzath()
a = MsgBox("Do you really want to Exit Project1? ", vbYesNo + vbQuestion, "Exit")
If a = vbYes Then
End
Else
Form1.Show
End If
End Function
( Form1 )
Private Sub cmdExit_Click()
Nimzath
End Sub
Private Sub Form_Unload(Cancel As Integer)
Nimzath
End Sub
இது எவ்வளவு இலகுவானது பார்த்தீர்களா? நீங்கள் உருவாக்கிய Function இன் பெயரை எழுதினால் மட்டும் போதும்.மேலும் சில Function கள் அடுத்த பதிவில்.....
எம் போன்ற ஐரி மாணவர்கலுக்கு மிகவும் உபயோகமான சிறந்த பதிவு...
ReplyDeleteபகிர்வுக்கு ரொம்ப நன்றி
தரமான பதிவு நண்பரே... தெளிவான விளக்கத்துடன் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகளுடன் நன்றிகளும்...
ReplyDeletePrivate Sub Form_Unload(Cancel As Integer)
ReplyDeleteNimzath
End Sub
இதனை இப்படி எழுதிக்கொள்ளவும்
Private Sub Form_Unload(Cancel As Integer)
Cancel = 1
Nimzath
End Sub