இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அதில் 100 இற்கு 90 வீதமானவை போலியானவையே அதாவது பணம் தராமல் ஏமாற்றுவது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.என்னால் குறிப்பிட்ட தளம் மூலம் பணம் பெற்றவை மாத்திரம்தான் உங்களுக்கு அறிமுகம் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இணையத்தில் மிக மிக இலகுவானது ஒன்றுதான் PTC (Paid To Click) எனப்படும் தளம் மூலம் சம்பாதிப்பது.இது எப்படி வேலை செய்கிறது என்று இன்று பார்ப்போம்.


TV முன் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடையில் பல விளம்பரங்கள் வருவதை நீங்கள் காண்பீர்கள் அதற்கு யாராவது பணம் தருகிறார்களா? இல்லை  ஆனால் இணையத்தில் குறிப்பிட்ட விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்தால் பணம் கிடைக்கும் தெரியுமா?....எப்படி?? (எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு சந்தேகம் பணத்தை எப்படி நம்முடைய கைக்கு கொண்டுவருவது என்பது, அதற்கு முதல் இதை தெரிந்து கொள்வோம் பின்னர் தெளிவாக விளக்குகிறேன் )

விளம்பரதாரர்   தனது பொருளை அல்லது சேவையை  நுகர்வோருக்கு தெரிவிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட  அளவு பணத்தை குறிப்பிட்ட தளத்தில் செலுத்துவார்.எப்படி என்றால் 500 முறை க்ளிக் செய்வதற்கு $5.00 என்ற  அடிப்படையில் ( இந்த அளவு ஒவ்வொரு தளத்திலும் மாறுபடும் உதாரமாக 1000 முறை க்ளிக் செய்வதற்கு  $1.00 or 100 முறை க்ளிக் செய்வதற்கு $2.00  என்றும் ஒரு சில தளங்கள் வழங்குகின்றன), இதனை நாம் ஒரு முறை க்ளிக் செய்து 30 வினாடிகள் பார்ப்பதற்கு ஒரு சிறிய அளவு பணம் ($0.01) நம்முடைய கணக்கில் சேரும்,குறிப்பிட்ட அளவு பணம் நம்முடைய கணக்கில் ($2.00) வந்ததுடன் Alertpay அல்லது Paypal மூலமாக தனது பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் (paypal (PP) or Alertpay (AP) பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்).


PTC தளம்மை பொருத்வரையில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 விளம்பரங்களை பார்க்க முடியும் (ஆனால் இன்று இது மாறிக்கொண்டு வருகிறது எப்படி என்றால் அந்த தளத்தில் எத்தனை விளம்பரங்கள் இருந்தாலும் அணைத்தையும் க்ளிக் செய்ய முடியும்.இதிலும் பல போலியான தளங்கள் இருக்கின்றன...கவணமாக இருங்கள்....உண்மையிலேயே நல்ல தளங்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்வேன் காத்திருக்கவும்). இதனை பார்வை இட்டால் ஒரு நாளைக்கு $0.04 மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இதில் $2.00 ஆக வேண்டும் என்றால் 50 நாட்கள் (0.04 x 50 = 2) தேவைப்படும்.இதனை சில பேர் பார்த்துவிட்டு அதாவது 50 நாட்களுக்கு க்ளிக் செய்தால் $2.00 மட்டும்தான? என்று நினைத்துவிட்டு இதனை விரும்பாமல் இருக்கலாம்.அப்படி என்றால் இதைவிட கூடிய பணம் தரக்கூடிய தளம் அதாவது ஒரு முறை க்ளிக் செய்தால் $0.10 என்று வேறுதளம் இல்லையா?  என்று பார்ப்போம்.

ஒரு விளம்பரத்தை பார்த்தால் $1.00 என்று சொல்லும் பல போலியான தளங்கள் இருக்கின்ற இவர்களுடைய Payout minimum வந்து $10000 ஆக இருக்கும் இந்த பணத்தை நாம் பெருவதற்கு பல வருடங்கள் செல்லும்.இதில்தான் நம்மில் பலர் ஏமாந்து இணையத்தில் பணம் சம்பாதிப்பது பொய் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.அப்படி என்றால் PTC இல் முதலீடு இல்லாமல் சம்பாதிப்பதற்கு வேறு வழி என்ன???

முதலீடு செய்து செய்து கொண்டு குறிப்பிட்ட தளத்தில்  Upgrade  உம்  Rented Referral உம் வாங்கினால் நிறைய சம்பாதிக்க முடியும் ( இது பற்றி பின்னர் தெளிவாக விளக்கம் தரப்படும்) முதலீடு இல்லாமல் $2.00 ஐ இரண்டு நாட்களிலும் பெற்றுக்கொள்ள முடியு(மா?)ம்.இதற்கான ஒரு ஏற்பாடுதான் Direct Referral (DR) ஆகும்.அப்படி என்றால்?

அடுத்த பதிவில்...........

>> Direct Referral & Rented Referral என்றால் என்ன? இரண்டிற்கும் இடையில் உள்ள            வித்தியாசம்    என்ன?
>> ஒரே தளத்தில் பல முறை register செய்து கொள்ள முடியுமா?
>>  ஒரே நாளில் $2.00 ஐ பெறுவது எப்படி?
>> ஏன் referral link மூலம் இணையவேண்டும்?
>>  PTC சம்பந்தமான உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் nimsath92@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

4 comments Blogger 4 Facebook

  1. @VimalKumar

    தெரியவில்லை...இருந்தாலும் தேடி பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ஆஹா பயனுள்ள தளம் இனி தொடர்ச்சியாக தொடர்கிறேன்.. நன்றி

    ReplyDelete
  3. @மாய உலகம்
    உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி!தொடருங்கள்....

    ReplyDelete
  4. @valaipathivu

    தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!

    எனக்கி, அதில் எல்லாம் விருப்பம் இல்லை...

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top