இன்றைய செய்தி பேஸ்புக் பிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.ஏன் என்றால் இந்த முறையில் பேஸ்புக் இற்கு சென்றால் எந்தவிதமான GPRS கட்டனங்களும் அரவிடப்படாது அல்லது நீங்கள் இணையத்தை பயன்படுத்துவதற்காக செயற்படுத்திய Data களில் எந்தவிதமான MBயும் குறையாது............அதை பற்றித்தான் இன்றைய பதிவு.
என்னைத் தொடர்பு கொண்டு சில நண்பர்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்னால் முடிந்தவரை பதில் வழங்கி வருகிறேன்.சில நண்பர்களுக்கு இன்னும் எந்தவிதமான பதிலும் கூறவே இல்லை காரணம் எங்கள் பிரதேசம் (சாய்ந்தமருது) தற்போது யாரோ கிரிஸ்மேன் (மர்ம மனிதன்) என்று சொல்லி அச்சுருத்திக்கொண்டே இருக்கிறான்.இரவில் நித்திரை இல்லை.....அதுவும் தற்போது ரமழான் மாதம் இவன் சரியாக இரவு 9.00 இற்கு பிறகுதான் வருகிறான் இரவு முழுக்க இவன் அங்க வாரானாம் இங்க வாரானாம் என்று கேள்வி பட்டு அச்சத்திலேயே இரவு பொழுதை கடந்து கொண்டு இருக்கிறோம்.இப்படி பிரச்சினை போய் எப்படியும் சஹர் நேரம் வந்துவிடும்.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு பிரிவினர்கள் இது வெறும் வதந்தி யாரும் நம்பாதீர்கள் என்று சொல்கிறார்கள்.இது எங்கள் பிரதேசத்தில் மட்டும் அல்ல நாட்டின் பல பாகங்களில் நடந்து வருகிறது.இதை ஏன்தான் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கிறதோ.....(செய்றதே அரசாங்கம்தானே....பின்ன எப்படிப்பா....கண்டு...கொள்வாங்க....)
சரி...விடுங்க ...இது பற்றி சரியான விளக்கம் ஆதாரபூர்வமாக கிடைத்தால் (இவன் யார்? இவன்ட நோக்கம் என்ன?) பிறகு சொல்கிறேன்.
http://0.facebook.com இங்கு செல்லுங்கள் (Computer & Mobile இரண்டிலும் வேலை செய்கிறது) எந்தவிதமாக கட்டனங்களும் அரவிடப்படமாட்டாது அதாவது உங்கள் கணக்கில் Rs.00.00 கிடந்தாலும் Facebook மட்டும் இந்த http://0.facebook.com முகவரி ஊடாக வேலை செய்யும்.
குறிப்பு : இதை நான் இலங்கையில் Mobitel இல் மாத்திரம் பயன்படுத்தி பார்த்தேன் வேலை செய்கிறது ஆனால் ஏனைய வலையமைப்பு மற்றும் ஏனைய நாடுகள் பற்றி தெரியாது பயன்படுத்தி வேலை செய்தால் சொல்லுங்கள்.
Very useful informationVery useful information
ReplyDeleteநன்றி அய்யா நன்றி...
ReplyDeleteகிரீஸ் கள்ளன் அவ்ளோ மோசமாவா இருக்கான்???
நல்லாயிருக்கே முயற்சிக்கிறேன்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.
@Mohamed Faaique
ReplyDeleteஇதுவரைக்கும் அவன யாரும் பிடிச்சதே இல்ல.....பிடிபட்டது எல்லாம் போலி கிரீஸ் கள்ளன் தான்(அப்பாவி மனிதர்கள்)
பாஸ் அவன் இந்த spider man , superman மாதிரி பறக்கானாம்....... அதான் எங்கட கையில் பிடி பர்ரானே இல்ல.....
Airtel il seythu paarththen salli wetturaanga free datawilum kuraikirathu
ReplyDelete@ A.S.M.ஹகீம்
ReplyDeleteஇலங்கையில் தற்போது வரை மொபிடலில் மாத்திரமே இந்த சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது.ஏனைய வலையமைப்புக்கு வழங்கப்பட்டால் நிச்சயம் (இறைவன் நாடினால்) அதை பற்றி பதிவு எழுதுவேன்.