Airtel தற்போது அம்பாறை மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு தனது 3G வலையமைப்பை கொடுத்துள்ளது. கல்முனைக்கு 3G வலையமைப்பை விரைவில் தருவோம்  தருவோம் என்று சொல்லி சுமார் ஒருவருடத்திற்கு மேல் ஏமாற்றிய இந்த Airtel அன்மையில் எடிசலாட் வலையமைப்பு கல்முனையில் 3G வலையமைப்பை கொடுத்ததை கண்டு சகிக்க முடியாமல் ( போட்டி போட முடியாமல்) Airtel தனது 3G Network ஐ கல்முனைக்கு மிக மிக விரைவாக  வழங்கியது என்றுதான் சொல்ல முடியும் (போட்டி என்றால் இப்படித்தான் இருக்கனும்)...


தெற்காசியாவில் முதன் முதலாக 4G Network ஐ அறிமுகப்டுத்தியது Dialog நிறுவனம் தான். ஆனால் இது இன்னும் பாவனைக்கு வரவில்லை சோதனை கட்டத்தில் தான் இருக்கிறது....நாங்களும் இருக்கிறம்டு சொல்லி Mobitel நிறுவனமும் இந்த 4G Network  இல் இறங்கியுள்ளது....Airtel , Etisalat எப்போது இந்த பணியில் இரங்கும்??
 
நான் Hutch வலையமைப்பை குறிப்பிட தவறியதற்கான  காரணம் இன்னும் இவர்கள்  3G Network ஐ கூட வழங்கவில்லை என்பதற்காகத்தான் ஆனால் இந்த வருட இறுதிக்குல்  தருவோம் என்று கூறி இருக்கிறார்கள் பார்ப்போம்...

அம்பாறையில் 3g Network இல்லாமலையே கொடி கட்டி பரந்த இந்த Airtel.....இப்போது 3G Network  உடன் வருகிறது....சொல்லையா வேண்டும்....

2 comments Blogger 2 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top