சென்ற தொடரில் பிரச்சினையை பகுப்பாய்வு செய்தல் பற்றி பார்த்தோம்.அதில் நாம் கவனிக்க வேண்டியது பிரச்சினைக்குறிய Output என்ன?Output இற்கு தேவையான Input என்ன? அதன் Process என்ன? என்பதை மட்டும் தான்,இந்த தொடரில்.
02.பிரச்சினையைத் தீர்ப்பதற்கான algorithm ஒன்றை விருத்தி செய்தல் பற்றி பார்ப்போம்.
algorithm என்றால் பிரச்சினை தீர்க்கப்படும்விதம் அல்லது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் செய்முறைகளை படிமுறையில் எழுதுவதே என்று சொல்லலாம்.
இரண்டாவது படிமுறையில், நாம் முதற்கட்டத்தில் ஆய்வு செய்த பிரச்சினைக்குறிய தீர்வினை முன்வைக்க வேண்டும்.இது இரண்டு வகைப்படும்.
01.பாய்ச்சற் கோட்டு வரைபடம் (Flow Chart) - மென்பொருள் தயாரிப்பாளருக்கு விளங்கும் வகையில் எழுதப்படுவது
02.போலி குறியீடு (Pseudo Code) - மென்பொருள் தயாரிப்பாளர் அல்லாதோருக்கு விளங்கும் வகையில் எழுதப்படுவது
போலி குறியீடு - Pseudo Code (Algorithm த்தின் Textual வடிவம்)
- Computer Program ஒன்றை Shorthand வடிவில் காட்டப்பயன்படுத்தப்படும் சொற்களே Pseudo Code ஆகும்.
- இது மென்பொருள் தயாரிப்பாளர் அல்லாதோருக்கு விளங்கும் வகையில் எழுதப்படும்.
- கணினி மொழியில் கையாளப்படுகின்ற Syntax களுக்கு பதிலாக , ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் மூலம் எழுதப்படும்.
- Program ஆரம்பிக்கிறது என்பதை காட்டுவதற்காக Begin உம் முடிகிறது என்பதை காட்டுவதற்காக End உம் பயன்படுத்தப்படும்.
சரி நாம் எடுத்துக்கொண்ட பிரச்சினைக்குறிய Input,Process,Output என்பவற்றை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஞாபகப்படுத்தி கொள்கிறேன்.
Input : Mark1 , mark2 , mark3
Process : Sum = mark1 + mark2 + mark3
Avg = Sum/3
Output : Sum , Avg
நாம் எடுத்துக்கொண்ட பிரச்சினைக்குறிய Pseudo Code ஐ எழுதி பார்ப்போம்.
Begin
input mark1 , mark2 , mark3
Total = mark1+ mark2 + mark3
avg = Total/3
output Total , avg
End
விளக்கம்....
Begin - Program ஆரம்பம்
input mark1 , mark2 , mark3 - மாணவர்களுடைய புள்ளி உள்ளீடு செய்யப்படுகிறது.
Total=mark1+mark2+mark3 - Total என்பதற்கு 3 பாடங்களில் பெற்ற புள்ளியின் மொத்தம் ஒப்படைக்கப்படுகிறது( அதாவது 3 பாடங்களில் மாணவன் பெற்ற புள்ளி கூட்டுப்படுகிறது.பின் அது Total என்ற மாறியின் (variable) பெறுமதிக்கு (Value) சமனாக RAM இல் SAVE செய்து கொள்ளும்.ஆனால், இது RAM இல் தற்காலியமாகத்தான் சேமிக்கப்பட்டு இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)
avg=Total/3 - Total இனை 3 இனால் பிரிக்கும்,வரும் விடையை avg என்ற variable இன் Value இற்கு சமனாக RAM இல் Save பன்னி கொள்ளும்.
output Total , avg - இப்போது மாணவன் 3 பாடங்களில் பெற்ற புள்ளியின் மொத்தமும் சராசரியும் வெளியீடாக வரும்.
End - Program முடிவு
உதாரணமாக உள்ளீடாக பின்வரும் புள்ளிகள் 48 , 58 , 68 வழங்கப்பட்டால் 174 மொத்தமாகவும் 58 சராசரியாகவும் காட்டும்..ஆனால் Process ஐ காட்ட மாட்டாது (வெளியீட்டை மாத்திரம் காட்டும்)
waiting for next lesson. interesting.
ReplyDeleteநானும் விசுவல் பேசிக் சில ஆரம்ப நிலைப் பாடங்கள் படித்திருக்கிறேன் (Computer course மூலமாக )....
ReplyDeleteநீங்கள் கொடுத்த மென்பொருளில் செய்து பார்கிறேன் சகோ ...
தொடர்ந்து இது பற்றி எழுதுங்கள் பலரும் படிக்கிறார்கள் ..