Card Number எல்லாம் சரியாக கொடுத்தும் ஏன் இணையத்தில் பயன்படுத்தி கொள்ள முடியாமல் இருக்கிறது? என்று பொதுவாக எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். உங்களுடைய Card ஐ ஏன் இணையத்தில் பயன்படுத்தி கொள்ள முடியாமல் இருக்கிறது தெரியுமா?
உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான் , வங்கி Card ஐ இப்படி இணையத்தில் பயன்படுத்தாமல் தற்கலியமாக இடைநிறுத்தி வைத்து இருக்கிறது. இல்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா? உங்கள் Card number, Expiration date, CVC போன்ற வற்றை யாருவேண்டுமானாலும் தெரிந்து கொண்டு அவர்கூட உங்கள் card ஐ பயன்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும்.
யாரோ வாங்கும் பொருட்களுக்கு நாம் பணம் கொடுக்க நினைப்போமா? இல்லை தானே, அதற்குத்தான் வங்கிகள் வாடிக்கையாளரின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகிறது. நீங்களாகவே விரும்பி கேட்டால் மாத்திரமே Card ஐ இணையத்தில் பயன்படுத்த அனுமதி வழங்குவார்கள்.இதற்கு, இதனை நான் பலமுறை கூறி விட்டேன் இருந்தாலும் தெரியாதவர்களுக்காக,
உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புறத்தில் உள்ள நம்பருக்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் அட்டையை Online இற்கு அக்டிவ் செய்ய சொல்லுங்கள்.அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார் உதாரணமாக அட்டை இலக்கம் , பெயர் , முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு சில பாதுகாப்பு கேள்விகளும் கேட்பார்கள் ஏன் என்றால் அட்டை உங்களுடயதுதானா? என்பதை சரி பார்ப்பதற்கு உங்கள் தகவல் அனைத்தும் சரி ஆனவுடன் எத்தனை நாளைக்கு அட்டையை Online இல் அக்டிக் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யுங்கள்.அதிகமாக ஏழு நாட்கள் மாத்திரமே வழங்கப்படும்(Debit card).
சரி, இனி உங்கள் Card இணையத்தில் பொருட்கள் அல்லது சேவைகள் பெற தயாராகிவிட்டது. உங்கள் Card பற்றிய விபரம் கேட்கும் போது மேலே Address Bar இல் அந்த இணையதளத்தின் முகவரி HTTP இல் இருந்தால் எக்காரணத்தை கொண்டும் Card பற்றிய விபரம் கொடுக்க வேண்டாம்.
HTTP இற்கு பதிலாக HTTPS இல் இருக்கிறதா? என்று பாருங்கள். இருந்தால் மட்டுமே Card பற்றிய விபரம் கொடுங்கள்.இப்போது Browser களில் HTTP மறைக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் அந்த இணையதளம் HTTPS இல் இருந்தால் முழுமுகவரியையும் காட்டும்.
HTTP இற்கு பதிலாக HTTPS இல் இருக்கிறதா? என்று பாருங்கள். இருந்தால் மட்டுமே Card பற்றிய விபரம் கொடுங்கள்.இப்போது Browser களில் HTTP மறைக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் அந்த இணையதளம் HTTPS இல் இருந்தால் முழுமுகவரியையும் காட்டும்.
அதற்கு முதல் அந்த இணையதளத்தின் நம்பக தன்மையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.ஏன் என்றால் ஒரு Phone வாங்க ஒரு இணையதளத்திற்கு சென்று விட்டீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.அதில் உங்களுக்கு ஒரு Phone பிடித்து விட்டது.Card மூலம் பணமும் கொடுத்து விட்டீர்கள்.ஆனால் உங்கள் வீட்டிற்கு Phone வராவிட்டால் எதுவும் செய்ய முடியர்து? வங்கியை தொடர்பு கொண்டு ஒரு பிரயோசனமும் இல்லை,அவர்கள் உறிய நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தி விடுவார்கள்.ஆகவே சற்று கவனமாக செயற்படுங்கள்.
இப்போதும் என்னுடைய பரிந்துரை Card ஐ பயன்படுத்த வேண்டாம்.இன்னும் பாதுகாப்பாக எப்படி பயன்படுத்தலாம் என்று பார்த்த பிறகு , அதற்கு பிறகு Google இடம் Domain வாங்க போவோம்.சரியா? (அடுத்த தொடரில் இது பற்றிய விபரம்தான்) மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்.
இப்போதும் என்னுடைய பரிந்துரை Card ஐ பயன்படுத்த வேண்டாம்.இன்னும் பாதுகாப்பாக எப்படி பயன்படுத்தலாம் என்று பார்த்த பிறகு , அதற்கு பிறகு Google இடம் Domain வாங்க போவோம்.சரியா? (அடுத்த தொடரில் இது பற்றிய விபரம்தான்) மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்.
பயனுள்ள தகவல் நன்றி
ReplyDelete----------------------
படித்து கருத்துகளை சொல்லுங்கள்
2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?
ஹலோ சார் நீங்க சொல்றது எல்லாம் கிரெடிட் கார்டுக்கா இல்ல டேவிட் கார்டுக்கா ???
ReplyDeleteநான்Commercial bank Debit Card Use பன்றன் அந்த கார்டுக்கு பின்னால இருக்க நம்பர்'க்கு call பன்னி Online la active பன்ன சொன்னன்,
அவங்க சொன்னாங்க Debit card Online ல Use பன்னமுடியாது என்று சொல்றாங்களே!!!
நீங்க எந்த Bank card use பன்றிங்க??
கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார் plzzzzzzzzzzzzz
@Muralitharan
ReplyDeleteஇரண்டிற்கும்
அவர்களிடம் மீண்டும் ஒரு அழைப்பை மேற்கொண்டு பாருங்கள்.
HNB BANK
Ok Sir I wil try again,
ReplyDeleteand thanks a lot for your help!