சென்ற தொடரில் திரட்டிகள் குறித்து பார்த்தோம் அல்லவா?அதை தொடர்ந்து இன்று ,திரட்டிகளில் உங்களுடைய பதிவை எப்படி பிரபலமாக்குவது என்று பார்ப்போம்.

சென்ற தொடரில் திரட்டிகளில் உங்கள் பதிவை இணைத்தால் அதிக வாசகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தேன், இதில் சிலருக்கு சந்தேகம் உண்டு அது என்ன? என்னுடைய புதிய பதிவுகளை திரட்டிகளில் இணைத்து விட்டேன் ஆனால் அந்த பதிவை யாருமே பெரிசா  படிக்கவில்லை என்று ஒரு சந்தேகம் இருக்கலாம் 

இதற்காண காரணங்கள் நிறைய உள்ளன.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய புதிய பதிவு வாசகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.கவலை பட வேண்டாம் தொடர்ந்து படியுங்கள் என்னவென்று புரியும்

யாருமே உங்களுடைய தலைப்பிற்குல் இருக்கும் விசயத்தை படிப்பதில்லை மாறாக உங்கள் பதிவின் தலைப்பையும் அடையாள படத்தையும் மட்டும் தான் பெரும்பாலானவர்கள் பார்த்துவிட்டு வருகிறார்கள் என்பது நான் இந்த பதிவுலகில் கண்ட உண்மை!

நீங்கள் இப்படியும் ஒரு சில நேரங்களில் யோசிப்பீர்கள் அதாவது பதிவிற்கு சம்பந்தமே இல்லாத தலைப்பையும் வைத்து விட்டு கவர்ச்சிகரமான படத்தையும் போட்டால் வருவார்கள்தானே? ஆம் வருவார்கள் இல்லை என்று கூற வில்லை ஆனால் இதன் விளைவு படு மோசமாக இருக்கும் அதாவது உங்களுடைய புதிய பதிவுகளை திரட்டிகளில் இணைக்காமல் போய் விடும் மற்றும் அப்படி வந்தவர்கள் (ஏமாற்றம் அடைந்தவர்கள் ) நிச்சயமாக மீண்டும் உங்கள் வலைப்பூ பக்கம் வரமாட்டார்கள்.

நான் கூற வருவது என்னவென்றால் 100 இற்கு 50 பேர் தலைப்பை பார்த்து விட்டு வந்தாலும் மீதி இருக்கும் 50 பேர் பதிவின் விளக்கத்தை பார்த்து விட்டு வருகிறார்கள்.ஆகவே திரட்டிகளில் உங்கள் பதிவை இணைக்கும் போது , அதில் பதிவு பற்றி விளக்கம் கொடுக்கும் போது உங்கள் பதிவின் சாரம்சத்தை முடியுமான அளவு கொடுக்க பாருங்கள்.

சரி இன்றைய தொடருக்கு வருவோம்.எல்லா திரட்டிகளும் வாசகர் பரிந்துரை என்ற ஒரு வசதியை வைத்து உள்ளது.அதை ஒவ்வொரு திரட்டிகளும் கையாளும் விதம் வேறு வேறாக  இருக்கிறது.திரட்டிகளில் இருந்து நம்முடைய வலைப்பூவிற்கு அதிகம் பேர் வருவதாக இருந்தால் அது இந்த வாசகர் பரிந்துரை மூலமாகத்தான் நடக்கும்.அது என்ன என்று கேட்குறீங்களா?

நான் என்னுடைய இந்த பதிவை தழிழ்10 திரட்டியில் தொழில்நுட்ப பிரிவில் இணைத்தால், அது தொழில்நுட்ப பிரிவில் புதுவரவு பகுதியில் சேர்ந்து விடும்.தமிழ்10 திரட்டியில் தொழில்நுட்ப - புதுவரவு பகுதியில் உலா வருபவருக்கு  என்னுடைய பதிவு பிடித்து இருந்தால் அதை முழுமையாக படிக்க என்னுடைய இணையதளத்திற்கு வருவார்.அவருக்கு இன்னும் அதிகமாக  இந்த பதிவு பிடித்து இருந்தால் தமிழ்10 இல் என்னுடைய பதிவிற்கு அவருடைய வாக்கினை வழங்கிவிட்டு செல்வார்.இப்படி மற்றவர்களும் என்னுடைய பதிவிற்கு வாக்குகள் அளிக்கும் போது அந்த பதிவு தொழில்நுட்ப பிரிவில் பிரபலமான பகுதிற்கு சென்று விடும்.

ஏற்கனவே பலபேர் படித்துவிட்டு தரமான பதிவு என்று சொன்னதால் அதை படிக்க தமிழ்10 வாசகர்கள் ஓடோடி வருவார்கள்.(எல்லா திரட்டிகளிலும் பிரபலமான பகுதியை படிப்பவர்கள் தான் அதிகம்)


இப்போது புரிந்து கொண்டீர்களா?  உங்கள் வலைப்பூவிற்கு திரட்டிகளில் இணைத்தும் ஏன் வாசகர்கள் வரவில்லை என்று?

திரட்டிகளில் உங்கள் பதிவு பிரபலமானால்..........? பாருங்கள் அந்த பதிவை படிக்க எத்தனை பேர் வருகிறார்கள் என்று.....இதற்கு (திரட்டிகளில் உங்கள்  பதிவு பிரபலமாவதற்கு) நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் திரட்டிகளின் vote widget இணை உங்கள் வலைப்பூவில் இணைத்து கொள்ளுங்கள்.இப்படி இணைப்பதால் நிச்சயமாக உங்கள் பதிவை படிப்பவர்கள் அது தரம் உள்ளதாக இருந்தால்....திரட்டிகளில் வாக்கினை அளிப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!.இதை பற்றி நண்பர் Abdul Basith அவர்கள் ஏற்கனவே எழுதிவிட்டார் அவரின் அந்த பதிவை படிக்க இங்கே

மேலும் எப்படி வாசகர்களை அதிகரிக்க முடியும் என்று இனி வரும் தொடர்களில் எதிர்பாருங்கள்.

Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.




1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top