இலங்கையில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள Mobitel நிறுவனம் இப்போது முற்கொடுப்பனவு இணைப்புக்கு 3  புதிய Package இனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதுவரை காலமும் தன்னுடைய Data Plan இல் எந்தவித மாற்றமும் செய்யாதவர்கள் (மாற்றம் செய்து இருந்தார்கள் உதாரணமாக ஒவ்வொரு Data Plan இற்குறிய கட்டணங்களை குறைத்து இருந்தார்கள் , இந்த வருடம் 2012 ரூபாய்க்கு 6 மாதத்திற்குல் பயன்படுத்தி கொள்ள கூடியவாறு 8GB Data இனை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்) அதாவது இலவச அழைப்புக்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் போன்றவற்றை வழங்காதவர்கள் (ஏற்கனவே வழங்கி இருந்தாலும் அதை ஒரு நாளைக்குல் பாவித்து முடிக்க வேண்டும்)இப்போது இந்த Remix  என்ற Package ஊடாக வழங்க முன்வந்துள்ளார்கள்.இது பற்றிய விபரம்




Remix Pre paid Plans 01 - Rs.16

Mobitel 2 Mobitel 10 நிமிட இலவச அழைப்புக்கள்
Mobitel 2 Mobitel 15 இலவச எஸ்.எம்.எஸ் 
20 MB இலவச டேட்டா
பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கு 5 நிமிட இலவச அழைப்புகள் (123 , 555 & 888)

இவை அனைத்தும் அரச வரிகளுடன் சேர்த்து Rs.19.59 அரவிடப்படும்.
3 நாட்களுக்குல் பயன்படுத்தி முடிக்க வேண்டும்

செயற்படுத்துவதற்கு 
#649# 
SMS R16 to 649

Remix Pre paid Plans 02 - Rs.40

Mobitel 2 Mobitel 25 நிமிட இலவச அழைப்புக்கள்
Mobitel 2 Mobitel 50 இலவச எஸ்.எம்.எஸ் 
50 MB இலவச  டேட்டா
பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கு 10 நிமிட இலவச அழைப்புகள் (123 , 555 & 888)

இவை அனைத்தும் அரச வரிகளுடன் சேர்த்து Rs.48.98 அரவிடப்படும்.
7 நாட்களுக்குல் பயன்படுத்தி முடிக்க வேண்டும்

செயற்படுத்துவதற்கு #649#
SMS R40 to 649

Remix Pre paid Plans 03 - Rs.80

Mobitel 2 Mobitel 50 நிமிட இலவச அழைப்புக்கள்
Mobitel 2 Mobitel 50 இலவச எஸ்.எம்.எஸ் 
150 MB இலவச  டேட்டா
பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்கு 20 நிமிட இலவச அழைப்புகள் (123 , 555 & 888)

இவை அனைத்தும் அரச வரிகளுடன் சேர்த்து Rs.97.76 அரவிடப்படும்.
21 நாட்களுக்குல் பயன்படுத்தி முடிக்க வேண்டும்

செயற்படுத்துவதற்கு #649#
SMS R80 to 649


மேலே உள்ள 3 Data Plan களிலும் உள்ள டேட்டா முடிந்தால் 1 MB க்கு 50 சதம் மாத்திரமே உங்களிடம் இருந்து அரவிடுவார்கள். இது உங்களுடைய Data Plan காலாவதியாகும் வரை மாத்திரமே செல்லுபடியாகும் என்பதை கவணத்தில் கொள்ளவும்.

கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் இவர்கள் ஏனைய வலையமைப்புக்கு எந்தவித இலவச அழைப்புக்களையும் வழங்கவில்லை என்பதுதான் இதில் உள்ள பாரிய குறை!

Airtel நிறுவனம் ஆரம்பத்தில் இதே போன்று ஒரு Package இனை (இதைவிட கட்டணம் குறைவு) அறிமுகப்படுத்தி இருந்தது.பிறகு சந்தையில் தன்னை போட்டி நிறுவனங்களுடன் தக்க வைத்து கொள்வதற்காக அதே  Package இல் ஏனைய வலையமைப்புக்கு இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்ற நற்செய்தியை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது என்பதை உங்களிடம் நான் கூறிக்கொள்கிறேன்.அதை போன்று இனி வரும் காலங்களில் Mobitel நிறுவனம் செய்யலாம் அல்லவா?

மேலதிக விபரம் தேவைப்படுவேர் http://www.mobitel.lk/remix இற்கு செல்லவும்.



Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.




1 comments Blogger 1 Facebook

  1. நண்பரே தங்களின் இதுபோன்ற அனைவரையும் சென்றடைய வேண்டிய பதிவுகளின் சுருக்கத்தையும் அதற்கான இணைப்பையும் நீங்கள் விரும்பும் பட்சத்தில் கூகிள்சிறியில் இணைக்கலாம். rss4sk.googlesri@blogger.com க்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.தானாகவே பிரசுரமாகும். மேலதிக தகவலுக்கு http://www.googlesri.com/ க்கு வாருங்கள்.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top