ஏற்கனவே என்னால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருள் இப்போது v2.0 ஆக வெளிவந்து இருக்கிறது.இது வெளிவருவதற்கு காரணமாக இருந்ததே நீங்கள் தான்.இந்த மென்பொருள் எப்படி இருக்கும் என்பதை நான் ஏற்கனவே காட்டி விட்டேன் (v1.0 இல்).அதை Download செய்தவர்களின் எண்னிக்கை இப்போது வரை 1373.இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டியதுக்கே இத்தனை பேர் Download ஆ????(இதை இரண்டு வாரங்களுக்கு முன்தான் பார்த்தேன் காரணம் பல பேர் (ஒரு சில பேர்தான்) v1.0 இற்குறிய முழுப்பதிப்பையும் தருமாறு என்னிடம் (E-mail மூலமாக) கேட்டுக்கொண்டார்கள் அதுவும் இல்லாமல் என்னுடைய நண்பர்களும் இதில் பல புதிய வசதிகளை சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்கள் அதற்கு பிறகுதான் நானே இதை மீண்டும் எழுத ஆரம்பித்தேன்)


புதிதாக சேர்த்து கொள்ளப்பட்ட வசதிகள்

01.விரும்பிய Password இனை தெரிவு செய்து கொள்ள முடியும்.
02.Pendrive இற்குல் வைத்து பயன்படுத்தலாம்
03.முற்றிலும் இலவசமானது!


இந்த மென்பொருளை நீங்கள் Pendrive இல் பயன்படுத்தி, உங்களுடைய முக்கியமான பைல்களை சேமிப்பதன் மூலம்,

01.உங்களுடைய பைல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கலாம்.

02.மற்றவர்கள் உங்கள் அனுமதி இல்லாமல் அந்த பைலை கொப்பி செய்து கொள்வதை தவிர்க்கலாம்.

03.Pendrive இற்கு வைரஸ் தாக்கி, உங்கள் பைல்கள் அழிந்து போவது தவிர்க்கப்படும்.

04.உங்கள் Password இனை மற்றவர்கள் கண்டுபிடிப்பது கஸ்டம் இதனால் உங்கள் பைல்களுக்கு பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கின்றது (இது பற்றிய விளக்கம் பயன்படுத்தும் முறையில்)


பயன்படுத்தும் முறை


01.Folder Personal v2.0 இனை Download செய்து கொள்ளுங்கள்.

http://dl.dropbox.com/u/53992679/Folder_Personal_v2.0_Setup.exe

http://www.mediafire.com/download.php?352r3f4gc394dua

02.அதை (Folder Personal v2.0 setup.exe) ஓபன் செய்து விரும்பிய இடத்தில் நிறுவிக்கொள்ளுங்கள் (Pendrive இல் பதிந்து வைப்பது நல்லம் உதாரணமாக F:\ எனும் இடத்தில்)

03.இப்போது உங்களிடம் விரும்பிய Password இனை தெரிவு செய்யுமாறு கேட்கும்.விரும்பிய File இனை உங்களுடைய Password ஆக தெரிவு செய்து கொள்ளுங்கள்.இது v1.0 இல் இருப்பதை போல் கொஞ்சம் வித்தியாசமான Password தான்.அதாவது இங்கு Password இற்கு எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவதில்லை மாறாக அதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பைல் இனை நீங்கள் Password ஆக கொடுக்க முடியும்.அதே இடத்தில் (Pendrive இற்குல் அதாவது F:\) அந்த பைல் இருந்தால் மாத்திரமே உங்களுடைய முக்கியமான பைல்களை திரும்ப பெற்றுக்கொள்ள  முடியும்.இல்லா விட்டால் Wrong Password என்று Screen தலைகீழாக நிற்கும்.

04.Pendrive இற்குல் PerSonaL என்ற போல்டர் வந்து இருக்கும்.அதை திறந்து முக்கியமான பைல்களினை சேமித்து கொள்ளுங்கள்.

05.Pendrive இற்குல் இருக்கும் Folder Personal v2.0 இனை ஓபன் செய்து கொள்ளுங்கள்.உங்கள் முக்கியமான பைல்கள் பாதுகாப்பான முறையில் Lock செய்யப்படும்.

06.நீங்கள் Password ஆக கொடுத்த பைல் இனை வேறு ஒரு இடத்தில் கொப்பி செய்து விட்டு, Pendrive இற்குல் இருக்கும் பைல் இனை ( Password ஆக கொடுத்ததை) அழித்து விடுங்கள்.

07.Pendrive இற்குல் இருக்கும் Folder Personal v2.0 இனை ஓபன் செய்து பாருங்கள் Wrong Password என்று Screen தலைகீழாக நிற்கும்.

08.Unlock செய்வதற்கு ஏற்கனவே வேறு இடத்தில் கொப்பி செய்து கொண்ட Password பைல் இனை Pendrive இற்குல் கொப்பி செய்து விடுங்கள்.உங்கள் முக்கியமான பைல்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.


பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்.இந்த மென்பொருள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவும்.

இதில் இன்னும் பல வசதிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.



11 comments Blogger 11 Facebook

  1. Good. Do u have any vb projects, college projects

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு .. நன்றி நண்பா

    ReplyDelete
  3. விரிவான விளக்கங்களும், தகவல்களும் அருமை ! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  4. @பொன்மலர்

    இல்லை

    ReplyDelete
  5. @என் ராஜபாட்டை"- ராஜா

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. @திண்டுக்கல் தனபாலன்

    நன்றி!

    ReplyDelete
  7. @பிஷ்ருள் ஹனான்

    நன்றி!

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வு .. நன்றி நண்பா

    ReplyDelete
  9. பயனுள்ள பகிர்வு .. நன்றி நண்பா

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top