எல்லோருக்கும் பலவிதமான ஆசைகள் இருக்கும்.ஆனால் இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆசை ஒன்று கண்டிப்பாக இருக்கும், அது தான் நம்ம எப்படி ஒரு Website தொடங்குற? இதற்கு என்று பிரத்தியோக Course ஏதாவது முடிக்க  வேண்டுமா? என்றால் வேண்டவே வேண்டாம்! (உங்களை கட்டாயப்படுத்தவில்லை! சொந்த வடிவமைப்பில் என்னுடைய இணையதளம் அமையவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் மேற்படிப்பு தொடருங்கள்...சாதாரணமாக ஒரு Website ஐ ஆரம்பிப்பது எப்படி? அதை பராமரிப்பது எப்படி? அதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது எப்படி? என மிக மிக எளிமையான முறையில் இந்த தொடர் உங்களுக்கு கற்பிக்கும்.இதற்கு உங்களிடம் கணினி அறிவும் Basic HTML பற்றிய அறிவும் இருந்தால் போதும் நிச்சயமாக இந்த தொடர் உங்களுக்கு வழிகாட்டும் (இறைவன் நாடினால்....) ) 

என்னப்பா?நம்ம முடியவில்லையா? அடிப்படை அறிவை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி? என்றுதானே யோசிக்கின்றீர்கள்...நீங்கள்  3 மாதம்  Web Designing என்ற பெயரில் பதிவு செய்து , பணம் கொடுத்து படிக்கும் படிப்பு வெறும் வடிவமைப்பு மட்டுமே! வடிவமைக்கும் போது பல பிரச்சினைகள் வரும், அதை அவர்கள் சொல்லித்தர மாட்டார்கள், அதை வடிவமைத்த  பிறகு எவ்வளவோ இருக்கு ஆனால் அதையும் அவா்கள் சொல்லித்தர மாட்டார்கள், இப்படித்தான் வடிவமைக்கிற என்று அந்த 3 மாதத்திற்குல் சொல்லித்தருவார்களே தவிர,  மற்றயதை நாம் தான் தேடி அல்லது அந்த துறையில் சென்று  படிக்க வேண்டும் . 

எனக்கி ஒரு அளவுக்குத்தான் அல்லது அரவே வடிவமைக்க தெரியாதே ! இது எப்படி சாத்தியம்? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்...உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்....Computer இல் நமக்கு தேவையான  Software அனைத்தையும் நாம் தான் உருவாக்க வேண்டும் என்றால்....நாம் Computer ஐ பயன்படுத்தவே மாட்டோம்....அல்லவா? எப்படி நமக்கு தேவையான Software இனை கட்டணம் செலுத்தியும்,  இலவசமாகவும் ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான ஒரு மென்பொருளை நாமளே வடிவமைத்து பெற்றுக்கொள்கின்றமோ, அது மாறித்தான் இந்த Web Designing....

ஏற்னவே வடிவமைக்கப்பட்டு பல Template கள் இணையத்தில் கட்டணமாகவும் இலவசமாகவும் கிடைக்கின்றது. அதை Download செய்து,  நீங்கள்  கொஞ்சம் உங்கள்  ரசனைக்கேற்ப மாற்றியமைத்து, அதை உங்கள் Website இற்கு இணைத்துவிட்டால் போதும்....அடுத் நொடி உங்கள் பெயரில் ஒரு Website உருவாகிவிடும் (இதை எப்படி செய்வது என்று இந்த தொடரில் எதிர்பாருங்கள்).

ஆரம்ப தொடர் என்பதால் உங்களை பயமுறுத்தவில்லை.....இதை செய்வது மிக எளிது ஆனால் உங்களிடம் ஆர்வம் இருக்க வேண்டும்...அப்பதான் இது இலகுவாக இருக்கும் இல்லை என்றால் கஸ்டமாகத்தான் இருக்கும்.

உங்களைப்போல் சொந்த Website ஒன்று உருவாக்க நினைக்கும் நண்பர்களுக்காக இந்த தொடரை அடிப்படையில் இருந்து சொல்லித்தர நான் முடிவு செய்துள்ளேன்.இதற்கு உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம்...அடுத்த தொடரில் சந்திப்போம்.

பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

9 comments Blogger 9 Facebook

  1. மிகவும் அவசராமக அடுத்த பதிவை போடவும்

    ReplyDelete
  2. மிகவும் அவசியமான பதிவு! தாங்கள் குறிப்பிட்டது போல ஒர் வலையகத்தினை உருவாக்கிவிட்டு அதில் பல பிரச்சனைகள் எற்ப்பட்டதை நான் ஏற்கனவே தங்களிடம் தெரியப்படுத்தி இருக்கிறேன். மிகவும் எதிர்பார்த்த பதிவு. மிக்க நன்றி....

    ReplyDelete
  3. மிகவும் அவசராமக அடுத்த பதிவை போடவும்

    ReplyDelete
  4. நன்றி. பயனுள்ள தகவல். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top