Microsoft Excel இல் மொத்தமாக நான்கு வகையான Operatorகள் காணப்படுகிறது. அவை Arithmetic, Comparison, Text Concatenation மற்றும் Reference Operators ஆகும்.இந்த பதிவின் ஊடாக முதல் Operator இனை மட்டுமே நாம் பார்போம் அடுத்தடுத்து வரும் பதிவில் சந்தர்பம் வரும் போது மிகுதியினை சொல்கிறேன்.
+ (plus sign) Addition
இலக்கங்களை கூட்டுவதற்கு இந்த Operator பயன்படுத்தப்படும்.
உதாரணம் 10 + 5
வெளியீடு 15
இதை MS Excel இல் செய்து பார்க வேண்டுமானால் அவ்விலக்கதிற்கு முன் = குறியீடை சேர்கவும்.இல்லை என்றால் அதை ஒரு Text ஆகவே Excel காண்பிக்கும்.
=10+5
குறிப்பு -ஏதேனும் ஒரு தரவை ஒரு Cell இற்குல் type செய்த பின் , அந்த Cell Address இனை வேறு ஒரு Cell இற்குல் அழைத்தால் அந்த cell Address இற்குல் காணப்படும் தரவானது அங்கு காட்சிபடுத்தப்படும்.
உதாரணம் B3 இற்குல் B1 மற்றும் B2 ஆகிய Cell Address இனை பயன்படுத்தியே 15 என்ற வெளியீடு பெறப்பட்டுள்ளது.B3 இற்குல் எழுதிய Formula இனை B4 இற்குல் நீங்கள் காணலாம்.
இலக்கங்களை கழிப்பதற்கு இந்த Operator பயன்படுத்தப்படும்.
உதாரணம் =10 - 5
வெளியீடு 5
* (asterisk) Multiplication
இலக்கங்களை பெருக்குவதற்கு இந்த Operator பயன்படுத்தப்படும்.
உதாரணம் =10 * 5
வெளியீடு 50
/(forward slash) Division
இலக்கங்களை வகுத்தலுக்கு பயன்டுத்த இந்த Operator உதவும்.
உதாரணம் =10 / 5
வெளியீடு 2
^ (caret) - Exponentiation
ஒரு இலக்கத்தின் விரும்பிய அடுக்கை பெற்றுக்கொள்ள இந்த Operator உதவும்.
உதாரணம் =10 ^ 5
(10 x 10 x 10 x 10 x 10)
வெளியீடு 100000
% (percent sign) Percent - வேறு ஒரு பதிவில் சொல்கிறேன்.
Task
கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு டைப் செய்தபின் Total மற்றும் Average இனை காணவும்.
Total என்பது Mala வின் MS Windows 10 , MS Word 2016 மற்றும் MS Excel 2016 ஆகிய பாடங்களின் கூட்டுத்தொகையாகும். அதை கண்டபின் ஏனைய மாணவர்களின் கூட்டுத்தொகையையும் காணவும்.
Average என்பது Mala வின் கூட்டுத்தொகையை 3 இனால் பிரித்து பெறப்படுவதாகும்.அதை கண்டபின் ஏனைய மாணவர்களின் Average இனையும் காணவும்.
பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment