- Entities என்றால் என்ன?
- Void Element என்றால் என்ன?
- H1 TAG எப்போது பயன்படுத்த வேண்டும்.
- Title TAG மற்றும் Heading TAG ஆகியவற்றுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகள் என்ன?
ஏற்கனவே எழுதப்பட்ட
- HTML பகுதி 01 இனை படிக்காதவா்கள் இங்கு கிளிக் செய்யவும்.
- பகுதி 02 படிக்காதவா்கள் இங்கு கிளிக் செய்யவும்.
HTML Entities
HTML Page இல் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடைவெளியை வழங்கும் போது அதனை Web Browser ஆனது கட்சிப்படுத்தாது.
உதாரணம்
<!DOCTYPE html>
<html>
<head> <title>Demo</title></head>
<body>
MHM NIMZATH
</body>
</html>
Web Browser இல் MHM NIMZATH இவ்வாறே தோன்றும்.செய்து பாருங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட இடைவெளி தேவையென்றால் என்று Type செய்யவும்.இதனை ஒரு முறை டைப் செய்தால் ஒரு இடைவெளி மாத்திரமே கிடைக்கும் ஆகவே தேவைக்கு ஏற்றாப்போல் அவ் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.
- இதனை HTML Entities என்று அழைப்பார்கள்.
- Entities ஆனது & குறியீட்டுடன் ஆரம்பமாகும் பின் அதனுடைய பெயர் மற்றும் இறுதியில் ; உடன் முடியும்.
- ஓரு Web Page இல் ஒன்றுக்கு மேற்பட்ட Entities இனை பயன்படுத்தலாம்.
- இது Case Sensitive ஆகும்.
- Copyright Symbol (© )தேவையென்றால் © என்று டைப் செய்யவும்.
- Registered trademark Symbol (®)தேவையென்றால் ® என்று டைப் செய்யவும்.
- £ € ¥ ¢ இந்த Entitles இனையும் முயற்சி செய்து பாருங்கள்.
உதாரணம்
Void Element
HTML Page இல் அடுத்த Line இற்கு செல்வதற்கு Enter key இனை Press செய்தால் அது Web Browser இல் காட்சிப்படுத்தப்படாது.இதற்கு </br> என்ற TAG இனை பயன்படுத்தவும்.
- இதனை ஒரு முறை பயன்படுத்தினால் ஒரு Line இடைவெளி கிடைக்கும்.தேவைக்கு ஏற்றாப்போல் பயன்படுத்தவும்.
- இது Empty Element அல்லது Self Closing Element அல்லது Void Element என்றும் அழைக்கப்படும்.
- இது போன்று இன்னும் இருக்கின்றது அடுத்த அடுத்த தொடரில் பார்ப்போம்.
Heading TAG
- இந்த TAG ஆனது இவ்வாறு <h1> any text </h1> காணப்டும்.
- H1 ஆனது உங்களது Page இல் உள்ள விடயங்களை அடையாளம் காணும் வகையில் இருத்தல் வேண்டும்.
- Title TAG மற்றும் Heading TAG ஆகிய இரண்டும் ஒன்றல்ல.
- Title TAG ஆனது Web Browser இன் TAB இலும் Search Engine இலும் Social Media இல் Share செய்யும் போதும் மற்றும் Bookmark செய்யும் போதும் தோன்றுவதாகும்.
- ஆனால் Heading ஆனது குறித்த Web Page இல் தடித்த மற்றும் ஏனையை எழுத்துக்களுடன் ஒப்பிடும் போது சற்று பெரிதாக காணப்படும்.
- Search Engine ஆனது Heading TAG இனை விட Title TAG இற்கு முக்கியத்துவம் அதிகம் வழங்கும்.
- ஒரு Page இல் ஒரு H1 TAG காணப்டுதல் சிறந்தது.
- ஒரே Page இல் ஒன்றுக்கு மேற்பட்ட Headings காணப்படும் போது H2,H3,H4 இவ்வாறு அந்த TAG இனை மாற்றி பயன்படுத்த வேண்டும்.
NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment