ஏற்கனவே எழுதப்பட்ட Android இல் எந்தவித Application இல்லாமல் File மற்றும் folder களை மறைத்து வைப்பது எப்படி? என்பதை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து அதை படியுங்கள்.
உங்கள் நண்பர்களிடம் மறக்காமல் Share செய்யுங்கள்.இந்த விடயங்களை அவா்களும் கற்றுக்கொள்வதற்கு உதவியாக அமையும்.
WhatsApp ஆனது கடந்த 7 நாட்களுக்குரிய Backup மற்றும் குறித்த அன்றைய நாளுக்குரிய Backup இணையும் Database என்ற Folder இற்குல் மொத்தமாக 8 File இணை தானாகவே சேமித்து வைத்திருக்கும்.
இந்த WhatsApp Backup File என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.
இன்று எனக்கு கிடைக்கும் சகல Message இணையும் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு WhatsApp ஆனது Automatic ஆக backup செய்து கொள்ளும். மறுநாள் ஏதாவது நேற்று வந்த Message ஒன்றை Delete செய்தாலும் நேற்றைய அந்த Backup File இணைபயன்படுத்தி Recovery செய்து கொள்ள முடியும்.
அதாவது இன்றைய திகதி 08/06/2021 ஆகும். எனது நண்பர் ஒருவர் 07/06/2021 இல் அனுப்பிய Message இணை இன்று Delete செய்தால் அது மறுநாள் (09/06/2021) அதிகாலை 2 மணிக்கு இடம்பெறும் Backup file இல் மாத்திரம் தான் இல்லாமல் போகும் ஆனால் 08/06/2021 உடைய Backup file இல் குறித்த Message ஆனது இருக்கும் (07ஆம் திகதிய backup ஆனது 08 ஆம் திகதி தான் இடம்பெறும்)
இந்த முறையில் இன்று சடுதியாக ஏற்பட்ட Message Delete இணை Recovery செய்து கொள்ள முடியாது.
இந்த Backup Database file இணை பயன்படுத்தி எப்படி Delete ஆன Message இணைRecovery செய்வது என்று பார்ப்போம்.
File Manager இணை open செய்து WhatsApp Folder இற்குல் காணப்படும் Database என்ற Sub Folder இணை Open செய்யவும்.
குறித்த திததியின் Backup ஆனது msgstore.db என்றும் கடந்த 7 நாட்களுக்குரிய File ஆனது msgstore-YYYY-MM-DD.1.db என்றும் காணப்படும்.
இதில் எந்த Date இல் இருந்த Message தேவை என்று நினைக்கின்றீர்களோ அதை தவிர மற்றயதை அவ்விடத்தில் இருந்து Delete அல்லது வேறு ஒரு இடத்திற்கு Move செய்யவும்.
நீங்கள் Restore செய்ய நினைக்கும் File இன் பெயர் msgstore-YYYY-MM-DD.1.db.crypt14 இவ்வாறு காணப்பட்டால் அதனை msgstore.db.crypt14 இவ்வாறு மாற்றம் செய்யவும்.
Crypt14 அல்லது Crypt12 என்ற File Extension இணை மாற்றம் செய்ய வேண்டாம்.
கவணிக்கவும்.இவ்வாறு செய்ய போவதால் இன்றைய தினத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற சகல Message உம் காணாமல் போகும். இதை தவிர்க்க WhatsApp Backup இணை Manual ஆக செய்யுங்கள்.
இதன் மூலம் உங்களால் கடந்த காலத்திற்கு சென்று பழைய திகதியில் உள்ள Message இணை உங்களால் பார்க்கவும் முடியும் மீண்டும் தற்போது உள்ள Message வரை திரும்ப பெறவும் முடியும்.
WhatsApp Chats இணை Manual ஆக Backup செய்ய
WhatsApp Settings இற்கு சென்று Chats என்பதை தெரிவு செய்யவும்.
பின் Chat backup என்பதை தெரிவு செய்து Back up என்ற Button இணை Touch செய்யவும். இதனால் Backup செய்யும் வரை உள்ள உங்கள் சகல Message உம் பத்திரமாக அந்த Database Folder இற்குல் backup செய்யும் திகதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.அதை பத்திரமாக வேறு ஒரு இடத்திற்கு Move செய்யவும்.
அடுத்து Mobile phone இன் Settings இற்கு வந்து Apps என்பதை தெரிவு செய்யவும்.
பின் Storage என்ற option இணை தெரிவு செய்து அதில் Clear Data என்பதை Touch செய்யவும்.இதன் மூலம் உங்கள் WhatsApp Account ஆனது உங்களது Mobile இல் இருந்து தற்காலியமாக இடைநிறுத்தப்படும்.
குறிப்பு
உங்கள் WhatsApp Version ஆனது 2.21.10.16 என்பதில் காணப்பட்டால் மேலே சொன்ன Local Backup பயன்படுத்த வேண்டாம்.
அதற்கு பதிலாக Google Drive Backup இணை பயன்படுத்தவும்.காரணம் குறித்த அந்த Version இல் Local Backup ஆனது அவர்களின் பிழை காரணமாக (Bug) வேலை செய்கிறது இல்லை.
Clear Data செய்தபின் மீண்டும் WhatsApp இணை Open செய்து உங்களது WhatsApp Number இணை வழங்கவும் (Backup File இன் Number உம் இப்போ கொடுக்கும் Number உம் சரியாக இருக்க வேண்டும். இந்த File ஆனது அந்த Number இற்கு மாத்திரமே வேலை செய்யும்.)
மேலே உள்ள Step இணை பயன்படுத்தி பழைய Message இணை திரும்ப பெற்றவுடன் தேவை ஏற்பட்டால் மீண்டும் அந்த Step இணை பயன்படுத்தி Manual ஆக Backup செய்த File இணை Restore செய்யுங்கள்.அப்பதான் உங்களால் நிகழ்காலத்திற்கு வர முடியும்.
NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
0 comments Blogger 0 Facebook
Post a Comment