இன்று பரவலாக பயன்படுத்தப்படும் ATM இல் Debit அல்லது Credit Card இணை பயன்படுத்தி நீங்கள் பணம் எடுத்து இருப்பீர்கள் அல்லது CDM இல் (Cash Deposit Machine) பணம் எடுத்து (Withdrawal)  அல்லது Card இல்லாமல் பணம் போட்டு (Deposit) இருப்பீர்கள்.ஆனால் Card இல்லாமல் ATM இல் பணம் எடுக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதைதான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

இந்த முறையில் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை, உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றாலும் அவரின் தொலைபேசி இலக்கத்திற்கு நாம் பணம் அனுப்பி அதை அவர்கள் ATM எடுக்கும் முறையைதான் Step by Step ஆக கூறப்போகிறேன்.

இதற்கு உங்களிடம் குறித்த வங்கியில் e-banking Account இருக்க வேண்டும். நான் HNB இணை பயன்படுத்துவதால் அதனையே இங்கு குறிப்பிடுகின்றேன்.

உங்களது e-banking Account இல் முதலில் Login செய்யவும்.

Transaction இற்கு சென்று Transfer to Mobile (Pay on ID) என்பதை தெரிவு செய்யவும்.


யாருக்கு பணம் அனுப்ப நினைக்கின்றீர்களோ அவரின் Mobile Number மற்றும் எவ்வளவு தொகை என்பதையும் குறிப்பிடவும்.





பின் Continue என்ற Button இணை Click செய்யவும். உங்களது வங்கியில் இருங்து OTP (On Time Password கிடைக்கும் அதனை சரியாக உட்செலுத்தி Transaction  இணை உறுதிப்படுத்தவும்.





இதற்கு சேவை கட்டணமாக உங்களிடம் இருந்து ரூபா 20 அறவிடப்படும்.பின் அந்த Mobile Number இற்கு Temporary Account Number மற்றும் PIN ஆகியை குறித்த வங்கியினால் அனுப்படும். 




குறிப்புக்கள்

  • இந்த இலக்கமானது ஒவ்வொரு முறை நீங்கள் அனுப்பும் போது மாறுபடும்.

  • இதனை நீங்கள் எந்த வங்கியில் இருந்து Generate செய்தீர்களோ அந்த வங்கியின் ATM இல் மாத்தரமே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

  • பணம் ATM இல் பெற்றுக்கொள்ளும் போது  சேவை கட்டணமாக எதுவும் அறவிடப்படாது.

  • இந்த இலக்கத்தை பயன்படுத்தி  ஒரு முறை மாத்திரமே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

பணத்தை எப்படி ATM மூலம பெறுவது என்று பார்ப்போம்.


ATM இற்கு சென்று Cardless Transaction இணை தெரிவு செய்யவும்.




அடுத்து Cash Out Service என்பதை தெரிவு செய்யவும்.




அதனை தொடரந்து Pay on ID Cash Out என்பதை தெரிவு செய்யவும்.




Mobile Number இற்கு வந்த ID மற்றும் PIN இணை வழங்கவும்.




பின் அந்த ID இல் உள்ள பணம் காட்சிப்படுத்தப்படும். Yes என்பதை தெரிவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.






NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top