சென்ற பதிவில் HTML என்றால் என்ன? அதில் பயன்படுத்தப்படும் TAG போன்ற தகவல்களை அறிந்து கொண்டோம். அதனை படிக்காதவா்கள் இங்கு கிளிக் செய்யுங்கள்.

இன்று ஒரு Web Page ஒன்றை எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். முதலில் Start இனை Click செய்து Notepad இனை Open செய்யவும்.



ஏற்கனவே நாம் பார்த்த TAG கள் ஆன html,head,title,body இனை Notepad இல் Type செய்யும் முன் கீழ் உள்ள விடயங்களை கருத்தில் கொள்ளவும்.

  1. TAG ஒன்று ஆரம்பித்தால் அதனை முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிந்து கொண்டோம். ஆனால் சில நேரங்களில் அதனை முடிக்காமல் இன்னுமொரு TAG இனை Open செய்யும் சந்தர்ப்பமும் ஏற்படும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.


  2. html Open TAG ஆனது ஆரம்பத்தில் எழுத வேண்டும்.<html> இதன் மூலம் Web page இன் ஆரம்ப இடத்தை Browser இற்கு சொல்ல முடியும். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த TAG கள் வரும்.இறுதியாகவே html Closing TAG எழுத வேண்டும்.

  3. head open TAG ஆனது html TAG இனை தொடர்ந்து எழுதும் இரண்டாவது TAG ஆகும்.இந்த பகுதியானது Web Page இன் Properties என்று கூறலாம்.இதில் தான்

    Web page இன் Title இணை வழங்க முடியும்

    Search Engine இற்கு இந்த பக்கத்தில் என்ன என்ன விடயங்கள் இருக்கின்றது என்று கூற முடியும்.


    CSS மற்றும் JavaScript போன்ற External Files களை page உடன் ஒன்றினைக்க முடியும்.

    இதில் Type செய்யும் எந்தவொரு விடயமும் Browser இல் காட்சிப்படுத்த படமாட்டாது.

  4. அதனை தொடர்ந்து title TAG இனை ஆரம்பிக்கவும்.Title TAG இன் ஆரம்ப மற்றும் இறுதி TAG இற்குல் Web Page இன் தலைப்பை வழங்கவும்.பின் head tag இனை மூடிக்கொள்ளவும்.

    உதாரணம்

    <html>
    <head> <title> My First Web Page </title>  </head>


  5. body TAG ஆனது  head TAG  Close செய்தபின் ஆரம்பிக்கபட வேண்டும்.இந்த TAG இற்குல் Type செய்யும் அனைத்தும் Browser இல் காட்சிப்படுத்தப்படும்.




    குறிப்புக்கள்

    <!DOCTYPE html> ஆனது HTML எந்த Version இல் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை Browser இற்கு சொல்வதாகும். இது HTML Version 5 இனை குறிக்கும்.இது html இற்கு மேல் எழுதபட வேண்டும்.

    Notepad இல் type செய்யும் போது மேல் உள்ளது போன்று TAG இனை Align செய்யுங்கள் இலகுவாக உங்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் அது அமையும். அந்த இடவெளியை பெற்றுக்கொள்ள TAB Key இனை Press செய்யவும்.

  6. பின் body TAG இணை Close செய்தபின் html TAG இனை Close செய்யவும்.
SAVE செய்ய விரும்பிய பெயரை கொடுத்தபின் இறுதியில் .html or .htm என்று சேர்க்கவும்.பின் Save as type இல் All Files என்பதை தெரிவு செய்யவும்.



பின் இந்த File இனை Browser இல் Open செய்தால் இவ்வாறு காட்சியளிக்கும்.



அடுத்த பதிவில் பல புதிய TAG களை Body  இற்குல் பயன்படுத்தி பார்ப்போம்.இந்த தொடரை தொடர்ச்சியாக எழுத உங்கள் ஆதரவை தாருங்கள்.

NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top